ரஜினியின் உடல் அசைவுகள், ஸ்டைல்களை இதில் படமாக்கி வருகின்றனர். இந்தக் காட்சிகள் பின்னர் மோஷன் கேப்சரிங் மூலம் அனிமேஷன் ரஜினிக்கு மாற்றப்படும்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது. அவரும் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இடையில் அசின் பெயரெல்லாம் கூட அடிபட்டது. ஆனால் இப்போது அனுஷ்காவும் இல்லை, அசினும் இல்லை. கத்ரீனா அல்லது தீபிகா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
இந்த வாரம் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அறிவிப்பதாக சௌந்தர்யா கூறியிருந்தார். இன்று அல்லது நாளை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.
இதற்கிடையே, ரஜினிக்கு ஷங்கர் சொன்ன கதை குறித்த விவாதம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment